» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் கட்சியின் மூத்த முன்னோடிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இறுதிப் பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

ஸ்பிக் - கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 55-வது தேசிய பாதுகாப்பு வார விழா!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:33:07 PM (IST)








