» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 17, மார்ச் 2026 11:40:32 AM (IST)



தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிர்வாகத் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான  எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே உள்ள எம்.ஜி.ஆர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், பி.ஏ. ஆறுமுக நயினார், பெருமாள்சாமி, இரா. ஹென்றி, இரா. சுதாகர், சேவியர், முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, சந்தனபட்டு, எம். பெருமாள், நடராஜன், அருண்ஜெபக்குமார், பில்லா விக்னேஷ், நாசரேத் ஜூலியட் மற்றும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாரதிய ஜனதா கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வெள்ளத்தாய், மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உஷா தேவி, வன்னிய ராஜ், காளிதாஸ் மற்றும் சொக்கலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்டத் தலைவர் எஸ்.டி.ஆர். விஜய் சீலன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர் மணிராஜ், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சண்முக குமாரி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், வழக்கறிஞர்கள் திருச்சிற்றம்பலம், ஆண்ட்ருமணி, ரவீந்திரன், சுகந்தன் ஆதித்தன், மந்திரமூர்த்தி, முனியசாமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சாந்தி, இந்திரா, ராஜேஸ்வரி, ஞான புஷ்பம், அன்ன பாக்கியம், அனிஷா அரபி, சுகன்யா, ஜெய பார்வதி, முத்துலட்சுமி, சத்யா லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory