» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஈரானில் வேலைக்குச் சென்ற தூத்துக்குடி வாலிபர் மாயம் : மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் தந்தை மனு!

திங்கள் 16, மார்ச் 2026 12:46:25 PM (IST)



ஈரான் கப்பலில் வேலைக்குச் சென்ற தூத்துக்குடி வாலிபர் மாயமான நிலையில், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எனது மகன் ரோகான்ஸ் (20) கடந்த 7.5.2025 அன்று ஈரானுக்கு கப்பல் வேலைக்கு சென்றார். அங்கு நடுக்கடலில் நிற்கும் கப்பல்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சப்ளை செய்யும் ஒரு கப்பலில் அவர் பணியாற்றி வந்தார்.

ஈரான் போர் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக அவர் எங்களிடம் பேசினார். அப்போது நாளை ஊருக்கு வருவதற்கு டிக்கெட் தருவதாக நிறுவனத்தினர் கூறி உள்ளனர் என தெரிவித்தார். அதற்குள் போர் தொடங்கிவிட்டது. அதன் பிறகு எங்கள் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் எங்கே இருக்கிறார். என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே எனது மகனை மீட்டு அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory