» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு

புதன் 25, பிப்ரவரி 2026 8:13:42 AM (IST)



தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளைக் கடலோரப் பாதுகாப்புப் குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தருவைகுளம் கடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதியில், இன்று (25.02.2026) அதிகாலை சுமார் 2.45 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாகக் கடலோரப் பாதுகாப்புப் குழுமத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது கடற்கரையில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளைக் கண்டறிந்தனர். சோதனையின் போது, தலா 35 கிலோ எடை கொண்ட 77 பீடி இலை மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. சர்வதேசச் சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் வருவதைக் கண்ட கடத்தல் கும்பல், தங்களது பைபர் படகுடன் நடுக்கடலுக்குள் தப்பிச் சென்றுவிட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் தருவைகுளம் கடல் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இது தொடர்பாகக் கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளர்  பேச்சிமுத்து மற்றும் தருவைகுளம் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சங்கர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய கடத்தல் கும்பலைத் தேடும் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் கடல் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory