» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், தொகுதி பொறுப்பாளருமான அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், திமுக வேட்பாளர் ராமஜெயம், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக வேட்பாளர் ராமஜெயத்தின் வெற்றியை உறுதி செய்ய, தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ தற்போது தீவிரமாகப் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளார்.
தொகுதியின் "வெற்றி முகமாக" அறியப்படும் அவர் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் செயல்வீரர்கள் கூட்டம், உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்முகையா எம்.எல்.ஏ-வின் இந்த நேரடிப் பங்களிப்பு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க, ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்பாளர் ராமஜெயத்திற்கு ஆதரவு அலை பெருகி வருகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, திமுக தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்வது உறுதி என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:23:12 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி பலி: திருமணமான ஒரே மாதத்தில் சோகம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:10:32 AM (IST)

வயரிங் வேலையின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:05:28 AM (IST)







