» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு

வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)



ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்திற்காக சென்ற காங்கிரஸ் வேட்பாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாகனப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென அவரது வாகனத்தை மறித்துச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். "கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் தொகுதிக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன? வெற்றி பெற்ற பிறகு இப்போதுதான் உங்களை இந்தப் பகுதியில் பார்க்க முடிகிறது" என்று கூறி மக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வேட்பாளரின் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory