» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வயரிங் வேலையின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:05:28 AM (IST)
குரும்பூர் அருகே வீட்டின் வயரிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோயில் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (39). இவர் தனது மனைவியைப் பிரிந்து ஆறுமுகனேரியில் தாயாருடன் வசித்து வந்தார். எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஷ் கண்ணன் நேற்று ஆறுமுகனேரியைச் சேர்ந்த உகேஷ் என்பவருடன் இணைந்து, குரும்பூர் அருகிலுள்ள அங்கமங்கலம் - சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஷ் கண்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஷ் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன் வேலையின் போது நேர்ந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:23:12 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி பலி: திருமணமான ஒரே மாதத்தில் சோகம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:10:32 AM (IST)







