» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தப்பியோடிய போக்சோ வழக்கு கைதி மீண்டும் பிடிபட்டார்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:00:50 AM (IST)
தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய வாலிபரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து கடந்த 6-ஆம் தேதி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வசந்தகுமாரைத் தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த வசந்தகுமாரை நேற்று (வியாழக்கிழமை) போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, எதிர்பாராத விதமாகப் போலீசாரின் பிடியில் இருந்து வசந்தகுமார் தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு வசந்தகுமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:23:12 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி பலி: திருமணமான ஒரே மாதத்தில் சோகம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:10:32 AM (IST)







