» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கல்லூரியில் வணிகச் சந்தை: மாணவர்கள் அசத்தல்!!

புதன் 25, பிப்ரவரி 2026 7:49:27 AM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், மாணவர்கள் தயாரித்த பொருட்களைச் சந்தைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த வணிகச் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்கள் தாங்களாகவே தயாரித்த இயற்கை உணவு வகைகள், கைவினைப் பொருட்கள்,மீன் வளர்ப்பு, ஜூஸ் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக பொருட்களை 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்களாகவே தயார் செய்து சந்தைப் படுத்தி விற்பனை செய்தனர்.இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் வணிகப் பொருட்களை   வாங்கி சென்றனர்.

இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ரோட்ராக்ட் சேர்மன் அருண், கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறைத் தலைவர் விஜயகோபாலன் அனைவரையும் வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் சிவசுப்பிரமணியம் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, மாணவர்களின் சந்தைப்படுத்தல் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.

பொருட்களைச் சிறப்பாகச் சந்தைப்படுத்திய மற்றும் அதிக விற்பனை செய்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரி ரோட்ராக்ட் தலைவர் ஹரிகரசுதன், வணிகவியல் துறைப் பேராசிரியர்கள் பொன்மணி, சுசிலா, வெற்றிச்செல்வி, பிலோமின் பிரபா உள்படப் பலர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக, வணிகவியல் துறைப் பேராசிரியர் ஸ்ரீ ராமஜெயா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory