» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா தொடக்கம்: மார்ச் 6-ம் தேதி சிறப்பு அபிஷேகம்

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 8:31:54 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வரும் மார்ச் 6-ம் தேதி சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

சனீஸ்வர பகவான் வரும் மார்ச் 6-ம் தேதி காலை 7:37 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு, நவ கைலாயங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் பகல் 12:30 மணிக்கு பூர்ணாகுதி நடைபெறும். தொடர்ந்து யாகசாலையில் தீபாராதனை, வழிபாடுகள், மந்திர ஜெபம் மற்றும் திருமுறை பாராயணம் நடைபெறும். கைலாசநாதர் சுவாமி மற்றும் சிவகாமி அம்பாளுக்குச் சிறப்புத் தீபாராதனையும், மாலை 5 மணிக்குச் சுவாமி - அம்பாளுக்கு லட்சார்ச்சனையும் நடைபெறும்.

மார்ச் 5-ம் தேதி: காலை 7 மணி முதல் 8 மணி வரை: மஹன்யாஜ ஜெபம், காலை 9 மணிக்கு ருத்ர ஜெபம் ஆரம்பம். பகல் 12:30 மணிக்கு  பதினொன்றாம் கால ருத்ர ஹோமம், மஹாபூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை. தொடர்ந்து கும்பம் புறப்பாடாகி, மேள தாளம் முழங்க சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியைச் சென்றடையும். தொடர்ந்து மகா கும்பாபிஷேகம், அலங்காரத் தீபாராதனை நடைபெறும். மாலை 3 மணிக்கு சங்கல்பம், மாலை 4 மணிக்கு நவக்கிரகம் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கும். 

மார்ச் 6-ம் தேதி (பெயர்ச்சி நாள்): காலை 4:30 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 6 மணிக்கு பூர்ணாகுதி, காலை 7 மணிக்கு யாகசாலையிலிருந்து கும்பம் புறப்பாடாகி சனீஸ்வர பகவான் சன்னதியைச் சென்றடையும். அங்கு சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory