» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நாளை தொடக்கம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:25:36 AM (IST)
நவகையாலயங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில், சனிப் பெயர்ச்சி விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
சனி பகவான் வருகிற 6-ஆம் தேதி காலை 7:37 மணிக்குக் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலை 7 மணி முதல் மகா நியாச ஜெபம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ருத்ர ஹோமம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.விழாவின் முக்கிய நிகழ்வாக 6-ஆம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், காலை 7 மணிக்குச் சனீஸ்வர பகவானுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு ஒரு கோடி நாம ஜெப வழிபாடு மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் கோவல மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் நிசாந்தினி ஆகியோர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக நன்மைக்காக ஸ்ரீசக்கரம் கோடி அர்ச்சனை : மேல்மருவத்தூர் பக்தர்கள் உலக சாதனை
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 7:25:48 PM (IST)

நெல்லை சரகத்தில் 23 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:31:50 AM (IST)

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:29:08 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - மீன் சந்தையில் பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:13:22 AM (IST)

முதல்வர் ஸ்டாலின் 24ஆம் தேதி தூத்துக்குடி வருகை : திமுக சார்பில் உற்சாக வரவேற்பு!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:00:37 AM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க உயிரி வேலி: வனத்துறை நடவடிக்கை!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:52:59 AM (IST)










