» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வர் ஸ்டாலின் 24ஆம் தேதி தூத்துக்குடி வருகை : திமுக சார்பில் உற்சாக வரவேற்பு!

ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:00:37 AM (IST)

வருகிற 24ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வழியாக வருகை தரவுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.  இதற்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் அவர் விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.

தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதலமைச்சருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து அணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory