» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - மீன் சந்தையில் பொதுமக்கள் ஆர்வம்!

ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:13:22 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து திடீரென அதிகரித்ததன் காரணமாக அவற்றின் விலை பாதியாகச் சரிந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ. 1,300-க்கு விற்பனையான சீலா மீன், நேற்று ரூ. 650-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஆழ்கடலில் நிலவிய பலத்த காற்று காரணமாக மீன் வரத்து குறைவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் கரை திரும்பிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு மீன் பாடு அமோகமாக இருந்தது. பெரிய அளவிலான சீலா, ஊழி, விளைமீன், பாறை மற்றும் சூரை போன்ற மீன்கள் அதிக அளவில் பிடிபட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டன.

மீன்கள் வரத்து அதிகரித்த போதிலும், திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் பொதுமக்களின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் மற்றும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு காரணமாகப் பலரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து வருவதாலும், கேரளாவிற்குச் செல்லும் மீன்களின் ஏற்றுமதி குறைந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 600-க்கு விற்பனையான விளை மீன், ஊழி மற்றும் பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ. 300 வரை சரிந்தன. கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்ட நண்டு ரூ. 600-க்கும், ஒரு கூடை ரூ. 1,000-க்கு விற்பனையான சாலை மீன் ரூ. 800-க்கும் விற்பனையானது. மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால், சந்தைக்கு வந்த பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory