» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் முன் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை : திருமணமான ஆறே நாட்களில் சோகம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:26:41 AM (IST)
திருச்செந்தூர் அருகே திருமணமான ஆறே நாட்களில், புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி, ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் இமானுவேல் எடிசன் (26). இவர் நாலுமாவடியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கோவில்பட்டியில் வைத்து திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், அடைக்கலாபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இமானுவேல் எடிசன் அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி மகேஷ்குமார் மற்றும் ரயில்வே எஸ்.எஸ்.ஐ சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றினர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருமணமான சில நாட்களிலேயே வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக நன்மைக்காக ஸ்ரீசக்கரம் கோடி அர்ச்சனை : மேல்மருவத்தூர் பக்தர்கள் உலக சாதனை
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 7:25:48 PM (IST)

நெல்லை சரகத்தில் 23 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:31:50 AM (IST)

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:29:08 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நாளை தொடக்கம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:25:36 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - மீன் சந்தையில் பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:13:22 AM (IST)

முதல்வர் ஸ்டாலின் 24ஆம் தேதி தூத்துக்குடி வருகை : திமுக சார்பில் உற்சாக வரவேற்பு!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:00:37 AM (IST)










