» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளைஞர் அடித்துக் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி எஸ்பியிடம் உறவினர்கள் மனு!
சனி 21, பிப்ரவரி 2026 4:03:47 PM (IST)

தூத்துக்குடி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகே கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் தமிழ் ராஜ் (30). கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி அன்று, பக்கத்து ஊரான கலப்பப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் ராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் லட்சுமியின் குடும்பத்தினர் தமிழ்ராஜை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த தமிழ் ராஜ், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று 20-ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாரைக்கிணறு காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அடிப்படையில் பிரவீன் என்பவர் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 5பேர் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும், அவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திமுக பிரமுகர் கோமதி தலைமையில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் பாரபட்சமின்றி விரைந்து கைது செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக நன்மைக்காக ஸ்ரீசக்கரம் கோடி அர்ச்சனை : மேல்மருவத்தூர் பக்தர்கள் உலக சாதனை
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 7:25:48 PM (IST)

நெல்லை சரகத்தில் 23 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:31:50 AM (IST)

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:29:08 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நாளை தொடக்கம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:25:36 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - மீன் சந்தையில் பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:13:22 AM (IST)

முதல்வர் ஸ்டாலின் 24ஆம் தேதி தூத்துக்குடி வருகை : திமுக சார்பில் உற்சாக வரவேற்பு!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:00:37 AM (IST)










