» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழுதான கைப்பேசி விற்பனை: ரூ.48,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

சனி 21, பிப்ரவரி 2026 8:38:09 AM (IST)

கைப்பேசி விற்பனையில் ஏற்பட்ட சேவைக் குறைபாடு காரணமாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.48,000 நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், உள்ளூர் கைப்பேசிக் கடை ஒன்றில் ரூ. 28,000 மதிப்பிலான கைப்பேசி ஒன்றை வாங்கினார். வாங்கிய சில நாட்களிலேயே அந்த கைப்பேசி பழுதானது. இது குறித்து கடைக்காரரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்காமல் சேவை மையத்தை அணுகுமாறு கூறியுள்ளார். சேவை மையத்தில் சரி செய்யப்பட்ட பின்பும், மீண்டும் அதே பழுது ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியதர்ஷினி, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ. சங்கர் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் அடங்கிய அமர்வு, கைப்பேசியின் அசல் விலை ரூ. 28,000, மன உளைச்சலுக்கான நஷ்டஈடு ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 ஆக மொத்தம் ரூ.48,000 தொகையை சம்பந்தப்பட்ட கடைக்காரர் வழங்க வேண்டும். தவறினால், இத்தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். 


மக்கள் கருத்து

BabuFeb 21, 2026 - 01:18:57 PM | Posted IP 104.2*****

kadaikaranga per sola mudiyathavanga yen news channel nadathanum pugar sonna ponnu per mattumvella varuth yen atnta kadai per sonna viparam ketu poiruma local channel local channel than

செய்தி வாசிப்பவன்Feb 21, 2026 - 09:57:27 AM | Posted IP 104.2*****

கதை , திரைக்கதை மாதிரி வசனம் எல்லாம் வேண்டாம் ,போன் மாடல் , ஏன் கடை பெயரை ஒழுங்கா வெளியிட முடியவில்லையா? பெயர் இல்லாத செய்தி எல்லாம் குப்பை செய்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory