» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்காச்சோளம் அறுவடைக்குச் சென்றபோது பன்றி கடித்து பெண் உட்பட 2 பேர் காயம்

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:21:19 AM (IST)

எட்டயபுரம் அருகே மக்காச்சோளம் அறுவடைக்குச் சென்ற பெண் உட்பட 2 பேரை பன்றி கடித்துக் காயப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா அயன்ராஜாபட்டி ஊராட்சி கைலாசபுரம் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் நேற்று காலை மக்காச்சோளம் அறுவடை பணி நடந்தது. அப்போது தோட்டத்திலிருந்து ஆக்ரோஷமாக ஓடிவந்த பன்றி ஒன்று, அறுவடை செய்துகொண்டிருந்த லட்சுமி மற்றும் நிலத்தின் உரிமையாளர் மூர்த்தி ஆகியோரைத் தாக்கி கடித்தது.

காயமடைந்த இருவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள முட்செடிகளுக்குள் பன்றிகள் குட்டிகளுடன் சுற்றித் திரிவதாகவும், அவை அவ்வப்போது பயிர்களைச் சேதப்படுத்துவதோடு தொழிலாளர்களையும் கடித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பான முறையில் அறுவடை நடைபெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory