» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் மாடசாமி வேட்புமனு தாக்கல்!

திங்கள் 6, ஏப்ரல் 2026 3:06:02 PM (IST)



விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாடசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த இவர், விளாத்திகுளம் தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அதனைத் தொடர்ந்து பரிசீலனை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த வேட்புமனு தாக்கலின் போது புதிய தமிழகம் கட்சியின்  முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஒன்றிய செயலாளர்கள் உமையணன், குமரன், ஜெயவீரன், விஜயகுமார், சிவசெல்வம், காமராஜ், நிர்வாகிகள்பெத்துராஜ், முனியசாமி, ஜேம்ஸ், பெருமாள், காளிதாஸ், மேலும் கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory