» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒர்க்ஷாப்பில் எலக்ட்ரிக் பொருட்களை திருடியவர் கைது

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:15:55 AM (IST)

கழுகுமலையில் கார் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப்பில் எலக்ட்ரிக் பொருட்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்த முத்துராமகிருஷ்ணன் (52) என்பவர் சங்கரன்கோவில் சாலையில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அவர் ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். அன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஒர்க்ஷாப்பின் பின்பக்கச் சுவரை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

அங்கு இருந்த 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்களை அந்த நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். நேற்று கழுகுமலை பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த ஒரு நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கோமதிநாயகம் (56) என்பதும், அவரே ஒர்க்ஷாப்பில் திருடியவர் என்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory