» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 67 பேர் கைது!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:13:11 AM (IST)
தமிழக அரசின் 2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு, கூட்டமைப்பு மாநிலத் துணை அமைப்பாளர் கனகவேல் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை முழங்கியபடி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட ஒரு ஆண் உட்பட மொத்தம் 67 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளம் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் மாடசாமி வேட்புமனு தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:06:02 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)







