» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கார் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 7:52:58 AM (IST)
சாத்தான்குளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கார் ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் ஆனந்தராஜ் (46). இவர், கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சசிரேகா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆனந்தராஜ் தனது தாயாரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு திருச்செந்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக ஊருக்கு வந்திருந்த ஆனந்தராஜ், மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சசிரேகா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
ஆனந்தராஜ் பலமுறை அழைத்தும் அவர் மீண்டும் வர மறுத்ததாகத் தெரிகிறது. மனைவி வர மறுத்ததால் கடந்த சில நாட்களாக மிகுந்த விரக்தியில் இருந்த ஆனந்தராஜ், நேற்று இரவு போதையில் இருந்தபோது தனது உடலில் தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளம் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் மாடசாமி வேட்புமனு தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:06:02 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)







