» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

வியாழன் 19, பிப்ரவரி 2026 7:48:18 AM (IST)

தமிழக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி வசந்தி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் மற்றும் சகோதரர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது: அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் மகன் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை. அமைச்சரின் சகோதரர்கள் சண்முகநாதன் மற்றும் சிவானந்தன் ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அமைச்சரின் மூன்று மகன்களில் அனந்த பத்மநாபன் மற்றும் அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவர் மட்டுமே நேரில் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கைப் பரிசீலித்த நீதிபதி வசந்தி, அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory