» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம்: 45 மனுக்கள் மீது விசாரணை!

புதன் 18, பிப்ரவரி 2026 8:11:15 PM (IST)

தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. 

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

இன்றைய கூட்டத்தில் மொத்தம் 45 மனுதாரர்கள் கலந்துகொண்டு தங்கள் புகார் மனுக்களை நேரடியாக வழங்கினர்.பொதுமக்களின் குறைகளை விரிவாகக் கேட்டறிந்த கூடுதல் கண்காணிப்பாளர், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory