» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போலீசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்கள் கைது : ஆயுதங்கள் பறிமுதல்

புதன் 18, பிப்ரவரி 2026 8:21:03 AM (IST)

தூத்துக்குடியில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4பேர் கைது செய்யப்பட்டனர். வாள், அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்ய்பபட்டது. 

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், மொட்டகோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, ஆத்திரமடைந்த அவர்கள் வாள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி போலீசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த 4 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜ் நகரைச் சேர்ந்த மனோவரோஸ் (27), கட்டிட தொழிலாளி கார்த்திக் (23), பூப்பாண்டியபுரத்தைச் சேர்ந்த வெம்பன்ராஜா (19) மற்றும் ராமதாஸ்நகரைச் சேர்ந்த சரவணக்குமார் (23) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்த தாளமுத்துநகர் போலீசார், வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory