» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 123 டாஸ்மாக் கடைகள் அடைப்பு : ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

புதன் 18, பிப்ரவரி 2026 8:01:12 AM (IST)

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு, இதுதொடர்பான வாயிற்கூட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி  டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊழியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். என்ற எங்களது நியாயமான கோரிக்கைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். 

ஆனால், இதுவரை எவ்வித தீர்வும் காணப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு எங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்," என வலியுறுத்தினர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக இணைந்து பங்கேற்பதால், இன்று ஒருநாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 123 மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

பணம்Feb 18, 2026 - 07:30:23 PM | Posted IP 104.2*****

தமிழகத்தில் 95% சாராய ஆலைகள் எல்லாம் அடசியல்வாதிகளுடையது. வருமானம் எல்லாம் அரசியல்வாதிக்கு பொய் தான் சேரும் , ஆனால் அரசு ஏன் சாராய ஆலைகளை அமைக்கக்கூடாது? பணம் விளையாடுகிறது

வாழ்த்துகள்Feb 18, 2026 - 09:33:24 AM | Posted IP 162.1*****

இந்த எக்ஸ்ட்ரால்லாம் வாங்குறீக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory