» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன் அனைத்து உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில், மாவட்டத்தின் அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை பல்வேறு உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டனர். தூத்துக்குடி ஊரக உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் வசவப்பபுரம் சோதனைச் சாவடியிலும், சாத்தான்குளம் உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் பெரியதாழை சோதனைச் சாவடியிலும் ஆய்வு செய்தனர். அதேபோல், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடிக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, பணியில் உள்ள காவலர்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, காவல்துறையினர் அனைவரும் ஒளிரும் ஜாக்கெட்டுகள் அணிந்து பாதுகாப்பாக வாகனச் சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும், சோதனைச் சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்திற்குள் நுழையும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களின் விவரங்களையும் முறையான பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை தற்போது முழுவீச்சில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு: அறுவடைப் பணியின்போது சோகம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)







