» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புரோட்டா கடை உரிமையாளரை கடத்தி தாக்குதல்: 4 பேர் கைது

சனி 7, பிப்ரவரி 2026 8:45:47 AM (IST)

தூத்துக்குடியில் வாங்கிய கடனை திருப்பி தர மறுத்ததால் புரோட்டா கடை உரிமையாளரை காரில் கடத்தி தாக்கியதாக, நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புரோட்டா கடை தூத்துக்குடி சுந்தரராமபுரத்தைச் சேர்ந்தவர் ஜவஹர் சாதிக் (40). இவர் அந்த பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். இவர் தொழிலை விருத்தி செய்வதற்காக நிதி நிறுவனம் நடத்தி வரும் அண்ணாநகர் 4-வது தெருவைச் சேர்ந்த சங்கர் (43) என்பவரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதனை அவர் திருப்பிச் செலுத்தாமல், வட்டியும் கொடுக்காமல் இருந்தாராம். 

நேற்று முன்தினம் இரவு சங்கர், கார் டிரைவர் பேச்சிமுத்து ஊழியர்கள் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (34), சுந்தரராமபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாரிமுத்து (43) ஆகிய 4 பேரும் காரில் சென்று ஜவஹர் சாதிக்கின் பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால், அவரை காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.

நிதி நிறுவன அதிபர் கைது இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் ஜவஹர் சாதிக்கை மீட்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன அதிபர் சங்கர், கார் டிரைவர் பேச்சிமுத்து, நிதி நிறுவன ஊழியர்கள் மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மதுபோதையில் வாகனத்தை இயக்கியவர் கைது!

ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:26:08 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory