» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிப்.12 பொதுவேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் பிரச்சார இயக்கம் தொடங்கியது!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 2:22:44 PM (IST)

தூத்துக்குடியில், பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து பிரச்சார இயக்கம் தொடங்கியது.
மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த பிப்ரவரி 4 முதல் தீவிரப் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு தூத்துக்குடி ஆல்பட் அண்ட் கோ சந்திப்பில் இந்தப் பிரச்சார இயக்கம் தொடங்கியது. தொழிலாளர் முன்னேற்ற பேரவை (LPF) மாவட்ட செயலாளர் சுசி ரவீந்திரன் பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரேஷ்புரம் மற்றும் ஒன்றாம் கேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமும் தொழிலாளர்களிடமும் ஆதரவு திரட்டப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு தொழிற்சங்க மற்றும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் எல்பிஎஃப் பி. முருகன், கருப்பசாமி, சிஐடியு பேச்சிமுத்து, ரசல் அப்பாதுரை, சிவபெருமாள், காசி, சங்கரன், ரவி தாக்கூர், ஏஐடியுசி பாலசிங்கம், சுப்ரமணியன், ஐஎன்டியுசி: ராஜகோபாலன், பால்ராஜ், ஸ்டீபன், ஏஐசிசிடியூ சகாயம், மின்னல் அம்சத், சிவராமன், ஐக்கிய விவசாய முன்னணி: ரவீந்திரன், புவிராஜ். திரளாகப் பங்கேற்றனர்:
இன்று மாலை சிதம்பர நகரில் நடைபெறும் பிரச்சார இயக்கத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும், ஐக்கிய விவசாய முன்னணியின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். நாளை காலை 8 மணிக்கு புதுக்கோட்டையில் தொடங்கும் பிரச்சாரப் பயணம், புதுக்கோட்டை, சாயர்புரம், திருவைகுண்டம், பேய்குளம், சாத்தான்குளம், உடன்குடி, பரமன்குறிச்சியில் நிறைவு பெறுகிறது.
மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் அனைவரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக, பிப்ரவரி 12 அன்று வணிகர்கள் அனைவரும் கடையடைப்பு செய்து இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







