» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகைகளுக்காக மாமியாரை மிதித்துக் கொன்ற மருமகன் கைது: தூத்துக்குடியில் பயங்கரம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:33:32 PM (IST)
தூத்துக்குடியில் நகைத் தகராறில் மாமியாரைத் தள்ளிவிட்டு, காலால் கழுத்தை மிதித்துக் கொடூரமாகக் கொலை செய்த மருமகனைப் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அத்திமரப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாப்பா (75). இவரது கணவர் செல்லச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், பாப்பா தனியாக வசித்து வந்தார். இவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் 4-வது மகள் சுப்புராணி என்பவரை முத்தையாபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் லிங்கதுரைக்கு (43) திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுப்புராணி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். நேற்று இரவு மாமியார் பாப்பாவின் வீட்டுக்குச் சென்ற லிங்கதுரை, தனது மனைவி அணிந்திருந்த நகைகளைத் தருமாறு கேட்டுத் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த லிங்கதுரை பாப்பாவைக் கீழே தள்ளிவிட்டு, காலால் அவரது கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பலத்த காயமடைந்த பாப்பாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தலைமறைவாக இருந்த மருமகன் லிங்கதுரையைக் கைது செய்த போலீசார்ர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த ஒரு மாதத்திலேயே நகைகளுக்காக மாமியாரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







