» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் வாகனத்தை இயக்கியவர் கைது!

ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:26:08 PM (IST)

மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்திய நபரை போலீசார் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி  to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (07.02.2026) கார் மற்றும் இருசக்கர வாகனம் விபத்துகுள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயமடைந்தார். 

இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர்  மணிகண்டன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கார் ஓட்டுநரான கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் (28) என்பவர் மதுஅருந்திவிட்டு வாகனத்தை இயக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு விபத்தை  ஏற்படுத்தி காயம் ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்திய நபர் மீது கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்காக பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
 
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்  எனவும்  தூத்துக்குடி  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளர்  நை.சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory