» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்சேர்ப்பு: எஸ்பி சிலம்பரசன் அறிவிப்பு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:54:19 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 19 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 22 பேரும், மேலும் மீனவ இளைஞர் ஊர்க்காவல் படையில் 5 பேர் (ஆண்கள் மட்டும்) என மொத்தம் 27 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, 18 வயது முதல் 45 வயதிற்குள் உள்ள, உடல் தகுதியுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் கடலில் நீச்சல் அடிக்க தெரிந்தவர்களாகவும், மீனவர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பிரிவில் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள்,
* பயோடேட்டா
* கல்வி மற்றும் வயது சான்றிதழ்களின் நகல்கள்
* பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (2)
* சுய முகவரி குறிப்பிடப்பட்ட அஞ்சல் அட்டை
ஆகியவற்றுடன் கூடிய விருப்ப மனுவை வரும் 12.02.2026ம் தேதிக்குள், தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை காவல் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
பெறப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் அஞ்சல் அட்டையின் மூலம் தேதி குறிப்பிடப்பட்டு தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







