» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மொபட் மீது தனியார் பஸ் மோதல்: மத போதகர் பலி
திங்கள் 6, அக்டோபர் 2025 8:28:33 AM (IST)
விளாத்திகுளத்தில் மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் மத போதகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் அருள்நேசன் (60). மத போதகர். இவர் நேற்று மாலையில் விளாத்திகுளம் பஸ் நிலையத்திலிருந்து மொபட்டில் சிதம்பரபுரம் நகருக்கு சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர் மீது பஸ் சக்கரம் ஏறியதில் தலை, கை நசுங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் குறுக்குச்சாலை வள்ளிநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பெருமாள்சாமி (44) மீது வழக்குப்பதிவு செய்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு வங்கியில் துணிகரக் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாதால் நகை தப்பியது
ஞாயிறு 5, ஜூலை 2026 2:28:21 PM (IST)

தூத்துக்குடியில் வடமாநில வாலிபர் மர்ம மரணம் : போலீஸார் விசாரணை
ஞாயிறு 5, ஜூலை 2026 2:19:33 PM (IST)

தூத்துக்குடி ஆலயத்தில் நிதிமுறைகேடு புகார் : சபை மக்கள் ஆர்ப்பாட்டம்- பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 2:03:21 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

லஞ்சமில்லா அரசை நடத்தும் ஜோசப் விஜய் அரசுக்கு நன்றி: தூத்துக்குடி காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:54:27 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:35:30 AM (IST)








