» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆன்லைன் கடன் செயலி: பணம் கேட்டு மிரட்டியவர் கைது!
ஞாயிறு 9, மார்ச் 2025 10:18:36 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் செயலி மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்திய பின்னரும் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடனை பெற்று அதனை முழுவதும் செலுத்திவிட்டாராம். ஆனால் அந்த செயலியின் உரிமையாளர், கடன் பெற்றவரை தொடர்புகொண்டு மீண்டும் பணம் கட்ட வேண்டும், அவ்வாறு கட்டவில்லையெனில், அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், தெற்கு டெல்லி, அயா நகரைச் சேர்ந்த சந்தேஷ்வர் மகன் தேவ்ஆனந்த் (20) என்பவர் கடன் தொகை கட்டக்கோரி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தெற்கு டெல்லி சென்ற போலீசார் தேவ் ஆனந்தை கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










