» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடியில் 3பேர் கைது!
ஞாயிறு 9, மார்ச் 2025 9:30:49 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து வெள்ளப்பட்டி கடற்கரையில் இன்று கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இலங்கைக்கு படகுகள் மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 68 மூட்டை பீடி இலைகளை கைப்பற்றினர்.
இது தொடர்பாக சிலுவை பட்டி கணபதி நகர் தங்கசாமி மகன் மகேஷ் குமார் (28), தாளமுத்து நகர் எம்ஜிஆர் நகர் அருளப்பன் மகன் அருளப்பன் ஆண்டனி ஜோசப் (40), தங்கசாமி மகன் மாயாண்டி (38) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் பயன்படுத்திய பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










