» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் : 2 போ் கைது
ஞாயிறு 9, மார்ச் 2025 9:29:56 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ கடல் அட்டைகள், 2 ஆயிரம் லிட்டா் டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமான பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நகர காவல் உதவி கண்காணிப்பாளா் மதனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தனிப்படை போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சட்டவிரோதமாக கடல் அட்டைகள், டீசல் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அங்கிருந்த பட்டினமருதூா் பகுதியைச் சோ்ந்த மொய்தீன் (40), திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த திலீப் (25) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா். மேலும், சுமாா் 2 ஆயிரம் லிட்டா் டீசலை பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்புக் குழு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










