» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் சிவில் கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா
ஞாயிறு 9, மார்ச் 2025 9:18:35 AM (IST)

தூத்துக்குடியில் மக்கள் சிவில் ஒரு கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா அண்ணா நகர் தங்கம் நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாவட்ட தலைவர் ச. தெ.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினரும், சுற்றுப்புற சூழலியளாருமான பேராசிரியை பாத்திமா பாபு விழாவை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் தெர்மல் ராஜா வரவேற்றார்.
விழாவில் மக்கள் சிவில் உரிமை கழக உறுப்பினரும் பள்ளியின் நிர்வாக குழு தலைவமான ஈஸ்டர் ராணி உட்பட ஆசிரியைகள் அனைவருக்கும் தமிழ் செம்மல், மக்கள் சிவில் உரிமை கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் நெய்தல் ஆண்டோ எழுதிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் விக்னேஷ் புதல்வி தியாஸ்ரீ பெண்கள் உரிமைகளை பற்றி பாடல் பாடினார்.
விழாவில் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் உறுப்பினர்கள் மாஸ் தமிழ்ச்செல்வன், அந்தோணி, நவமணி தங்கராஜ், பூசைதுரை, கிதர் பிஸ்மி மற்றும் அவர்களது துணைவியார்கள், மற்றும் செபஸ்டியான், சம்சுதீன், கண்ணன், ராபின், இசக்கிமுத்து, உட்பட பலர் கலந்து காெண்டனர். தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் சம்சுதீன் நன்றி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










