» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மகளிர் தின விழா
சனி 8, மார்ச் 2025 8:10:56 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் மற்றும் தமிழ் விவாதப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் (பொறுப்பு) வே. ராணி வரவேற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து, மூன்றாம் ஆண்டு மாணவி பு. சபி பிரிஷா மகளிர் தினச் சிறப்புக் கவிதை வாசித்தார். முதலாம் ஆண்டு மாணவி பெ. ஜெய ரஞ்சினி தமிழுரை ஆற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சுவர்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நீ. நீதிசெல்வன் விழாவினை தலைமை தாங்கி தலைமையுரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செ.கு.மெய்வேந்தன் நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










