» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாலுமாவடியில் ஆசீர்வாத உபவாச ஜெபம் : திரளானோர் பங்கேற்பு
சனி 8, மார்ச் 2025 8:02:31 PM (IST)

நாலுமாவடியில் நடந்த வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தேவ செய்தி அளித்து, வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களின் ஆசீர்வாதத்திற்காக விசேஷித்த ஜெபத்தை நடத்தினார்.
வியாபாரம் மற்றும் தொழில் அதிபர்களின் சாட்சிகள் இடம்பெற்றன. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, சென்னை மற்றும் பல்வேறு மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் அனைத்து ஊர்களுக்கும் திரும்ப செல்வதற்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










