» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.104.167 கோடி கடன் உதவி வழங்கல்
சனி 8, மார்ச் 2025 5:39:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 1206 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.104.167 கோடி மதிப்பிலான வங்கி கடன்களை ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (08.03.2025) நடைபெற்ற உலக மகளிர் தின விழா 2025-ல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், நலத் திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வைத்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் பெஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமனற உறுப்பினர் எம்.சி.சண்முகையா , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 1206 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.104.167 கோடி மதிப்பிலான வங்கி கடன்களை வழங்கினார். விழாவில் துணை மேயர் செ.ஜெனிட்டா , திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மல்லிகா , மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம்) தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










