» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3252 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.6.62 கோடி இழப்பீடு!
சனி 8, மார்ச் 2025 5:31:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்த தீர்வு தொகை ரூ.6 கோடியே 62 லட்சத்தி 76ஆயிரத்து 699 ஆகும்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர் வசந்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு உட்பட ஆக மொத்தம் 13 அமர்வுகளில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தாண்டவன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வஷீத் குமார், சார்பு நீதிபதி பிஸ்மிதா மற்றும் ஏனைய நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 683 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 110 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ..1,29,87,958 ஆகும்.
மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3970 வழக்குகளில் Rs.5,32,88,741 மதிப்புள்ள 3242 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. ஆக மொத்தம் 4653 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3252 வழக்குகள் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.6 கோடியே 62 லட்சத்தி 76ஆயிரத்து 699 ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில்,தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










