» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அணுக்கழிவு கொட்டுவதாக வதந்தி பரப்புவர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
சனி 8, மார்ச் 2025 4:47:49 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டுவதாக தவறான வதந்தி பரப்புவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டப்படுவதாக சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக பொதுமக்களை ஒன்று திரட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் தெரிய வருகிறது.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு அணு நிலையமும் செயல்படவில்லை. அணுக்கழிவும் வெளியேற்றப்படவில்லை. மேலும் அணுக்கழிவை கொட்டுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கேயும் அதற்கென தனியாக இடமில்லை. எனவே பொதுமக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும், மேலும் தவறான தகவலை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










