» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசைக் கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

சனி 8, மார்ச் 2025 4:19:24 PM (IST)

மத்திய அரசைக் கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி 3 சட்டமன்ற தொகுதிகளிலும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று வடக்கு மாவட்டச் செயலாளர்,  அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

இந்தித் திணிப்பு நிதிப்பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிவாரியாக திமுக இளைஞரணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமையில் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதாஜீவன்  அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  அறிவிப்பின்படி, இந்தி திணிப்பு - நிதிப்பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பு என அனைத்து விதங்களிலும் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்திடும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே இளைஞரணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக திமுக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்களும், இளம் பேச்சாளர் சஞ்சய் அவர்களும், தலைமை செயற்குழு உறுப்பினர் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களும் மாநகர திமுக செயலாளர் S.R.ஆனந்த சேகரன் அவர்களும் உரையாற்ற உள்ளனர். 

மேலும் மார்ச் 10ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் எட்டையாபுரம் நடுவிற்பட்டி பகுதியில் இளைஞரணி சார்பில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக ஊடகவியலாளர் மில்டன், இளம் பேச்சாளர் சக்திவேல் முருகன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். 

அதற்கு மறுநாள் மார்ச் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 6 மணிக்கு கோவில்பட்டி சட்டமன்றத் மாலை தொகுதியில் இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள லாயல் மில் காலனி பகுதியில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் சிறப்புச் பேச்சாளராக திமுக மாநில மாணவரணித் தலைவர் இரா.ராஜிவ் காந்தி, இளம்பேச்சாளர் உமாராணி  மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி ஆகியோர் உறையாற்ற உள்ளார்கள். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள இந்த மூன்று கண்டனப் பொதுக்கூட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன். மேலும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளும், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory