» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 2 போ் கைது
வெள்ளி 7, மார்ச் 2025 8:52:53 AM (IST)
தூத்துக்குடியில் 1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கியதாக 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையிலான போலீசார் , முத்தையாபுரம் வடக்கு தெருவில் சோதனை மேற்கொண்டனா். அங்கு ஓரிடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீவைகுண்டத்தை சோ்ந்த கணேசன்(30), முத்தரசன்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 35 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் இருந்த மொத்தம் 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம் சுற்றுவட்டாரங்களில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆடு, மாடு பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)










