» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: 2பேர் காயம்
வியாழன் 6, மார்ச் 2025 8:20:15 PM (IST)
தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் 2பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த பட்டு மாரியப்பன் மகன் பட்டு தங்கம் (23). இவர் தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (21) என்பவரை ஏற்றிக்கொண்டு புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார். இவருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதியை சேர்ந்த துரைமுத்து(45) என்பவர்திடீரென வலது பக்கம் திரும்பி உள்ளார்.
அப்போது பின்னால் வந்தபட்டுதங்கம ஓட்டி வந்தஇருசக்கர வாகனம் துரைமுத்து ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் உள்ளோர் 3 பேரையும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சென்றசிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பட்டு தங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்தகாயமடைந்த மற்ற இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)










