» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாதனை மகளிருக்கு விருது வழங்கும் விழா!
வியாழன் 6, மார்ச் 2025 3:48:47 PM (IST)

தூத்துக்குடியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம் & விமன்ஸ் சேவா டிரஸ்ட் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், காமராஜ் மகளிர் கல்லூரி இணைந்து சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் & விமன்ஸ் சேவா டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
காமராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் வான்மதி, காமராஜ் கல்லூரி முதல்வர் அசோக் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உதவி ஆட்சியர் (பயிற்சி) சத்யா, கல்லூரி கல்வி இணை இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகளிருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பூங்கோதை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சுபாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மகளிர் தின கொண்டாட்டத்தை ஒட்டி பாரம்பரிய உணவு கூடங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ரசாயன கலப்படம் இல்லாமல் பாரம்பரியமான முறைப்படி தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ் இடம்பெற்று இருந்தது. மேலும் பெண்களின் தைரியம், பெண்மையை போற்றுதல் போன்ற வடிவங்களில் கோல போட்டியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பலவிதமான கோலங்களை வரைந்திருந்தனர். தொடர்ந்து பெண்களுக்கான நடனப் போட்டிகள் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விழாவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், பெண்களை கொண்டாட கூடிய வகையில் சர்வதேச மகளிர் தினத்தை இன்று கொண்டாடுகிறோம். இதில் பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பீனிக்ஸ் விருது 17வது ஆண்டாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் எந்த கட்டணமும் இல்லாமல் பெண்களுக்கு விற்பனை கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை கூடங்களில் ஸ்டால் வைத்துள்ள பெண்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்காக உதவ வங்கி அதிகாரிகளும் வந்துள்ளனர். இது ஒரு முன்மாதிரியான நிகழ்வாக தூத்துக்குடியில் நடத்தப்படுகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)










