» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எட்டயபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 6, மார்ச் 2025 12:22:44 PM (IST)

எட்டயபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று 06.03.2025 வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பதிவுத் துறையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள எட்டயபுரம் புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார். துணைப்பதிவுத்துறை தலைவர் திருநெல்வேலி மண்டலம் செ. செந்தமிழ் செல்வன், மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) பாளையங்கோட்டை பொ.சண்முகசுந்தரி, எட்டயபுரம் சார்பதிவாளர் செ.இராமமூர்த்தி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலெட்சுமி சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)










