» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆர்ப்பாட்டம்!

வியாழன் 6, மார்ச் 2025 12:15:01 PM (IST)



தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், அல்லிகுளம் முருகன் நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாரிமுத்து (43). இவர் ஐக்கிய ஜனதா தளம் மாநிலத் தொழிலாளர் அணி மாநிலச் செயலாளராக உள்ளார். இவரது உடன் பிறந்த தம்பி பாலமுருகன் (39). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாலமுருகனின் மனைவி பவானி (36) என்பவர்  புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இது சம்பந்தமாக பவானியின் புகார் மனு மீது விசாரணைக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது.. இந்த நிலையில், மாரிமுத்துவை தாக்கியதாக அவரது தம்பி மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தொழிலாளர் அணி சார்பாக மாநில தொழிலாளர் சங்க பேரவை தலைவர்  தாமரை வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் குழந்தை பாண்டி உட்பட பலர் கலந்து காெண்டனர். 


மக்கள் கருத்து

கந்தசாமிMar 6, 2025 - 01:23:54 PM | Posted IP 162.1*****

சொக்கலிங்கம் இருக்காரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory