» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வியாழன் 6, மார்ச் 2025 11:27:14 AM (IST)

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே./பைஸி கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மைதீன் கனி தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் நவாஸ், மாநில மீனவர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் கௌது மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முகமது உமர் வரவேற்புரையாற்றினார்.
விசாரணை ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயக சக்திகளை மிரட்டி ஒடுக்கும் பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷேக் அஸ்ரப் அலி பைஜி, புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரி செல்வம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி,MMMK மாவட்டத் தலைவர் சம்சுதீன், இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உள்பட பல்வேறு ஜனநாயக சக்திகளின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்கள்.
இந்த கூட்டத்தில் தொகுதி,நகர,கிளைகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள்,உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, எதிர் குரல்களை ஒடுக்கும் பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராகவும்,SDPI கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே./பைஸியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக தூத்துக்குடி தொகுதி தலைவர் ஷேக் முகைதீன் நன்றி உரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)










