» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிடிபடும் பாம்புகளை உப்பள புதருக்குள் விட்டு செல்வதால் தொழிலாளர்கள் அச்சம்!

வியாழன் 6, மார்ச் 2025 10:40:29 AM (IST)

தூத்துக்குடியில் பிடிபடும் பாம்புகள் உப்பளங்கள் அருகே உள்ள புதர்களில் விடப்படுவதால், அங்கிருந்து அவை உப்பளங்களுக்கு படையெடுத்துவருவதால் தொழிலாளர்கள் பீதியுடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு பெருமை சேர்ப்பதில் உப்புத் தொழிலும் ஒன்றாகும். இந்த உப்பளங்களில் பணியாற்றுவது அனைவராலும் செய்யமுடியாத ஒன்றாகும். இங்கு அதிகாலை 5 மணிக்கு முன்னர் இருந்து பணி தொடங்கும். தற்போது கடந்த சில நாள்களாக தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் உள்ள உப்பளங்களில் பாம்புகள் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், மாநகர் பகுதிகளில் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்படும் பாம்புகள் இங்குள்ள புதர்களில் விடப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகர் பகுதி குடியிருப்புகளில் பிடிபடும் பாம்புகளை சாக்கு மூட்டைகளில் பிடித்து வரும் தீயணைப்பு துறையினர் அவற்றை வனத்துறையில் ஒப்படைக்காமலும், காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லாமலும் உப்பளங்கள் அருகேயுள்ள சிறியபுதர்களில், குறிப்பாக மத்திய கடலாராய்ச்சி கழகம் அருகேயுள்ள பஸ் நிறுத்தம், கோயில் அருகேயுள்ள உப்பளங்களுக்கு செல்லும் மண் சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விட்டு செல்கின்றனர். 

பகலில் பாம்புகளை விட்டு சென்றால் தொழிலாளர்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இரவு நேரங்களில் மொத்தமாக கொட்டி செல்கின்றனர். அவை அருகில் உள்ள உப்பளங்கள், ஷெட்கள், இரவு காவலாளிகளின் குடிைசகள், வாங்கிங் ட்ராக்குகளுக்குள் சர்வசாதாரணமாக நடமாட துவங்குவதால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். மேலும் பல தொழிலாளர்கள்  அதிகாலைக்கு வேலைக்கு வரமுடியாமல் பாம்புகளால் 7 மணிக்கு பின்னரே வேலைக்கு செல்ல முடியும் நிலை உள்ளது.

இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது: வீடுகளில் பிடிக்கப்படும் பாம்புகளை முறையாக பெற்றுக்கொள்ள வனத்துறையினர் வருவதில்லை. அதனால், அருகில் உள்ள புதர்களில் விடப்படும் நிலை ஏற்படுகிறது. இருப்பினும், மலைப் பகுதிகளில் பாம்புகளை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர்.

அதிகாலையில் வேலைக்குச் செல்லும் உப்பளத்தொழிலாளர்கள் இந்த விஷப் பாம்புகளால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காணவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory