» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாய்-மகள் கொலை வழக்கில் குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ் : தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 6, மார்ச் 2025 10:13:08 AM (IST)



எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது குற்றவாளி தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தை சேர்ந்தவர் சீதாலெட்சுமி (75), அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோரை கடந்த 3-ஆம் தேதி அவர்களது வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலையத்தில் குற்ற எண் 46/2025 சட்டப்பிரிவு 333, 331 (4), 103 (1), 309 (6) BNS பிரகாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையிலும், கிராமத்தினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி ஆதாயக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மேலநம்பிபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குற்றவாளிகளை சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்க மேற்படி காவல்துறையினர் திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும்,இச்சம்பவம் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் மற்றும்திருநெல்வேலி சரக காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையின் கீழ்; தூத்துக்குடிமற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மோப்பநாய் படைப் பிரிவு மற்றும் 6 ட்ரோன் கேமராக்கள் மூலம் வயல்வெளிகள் மற்றும் காட்டுப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவும் பகலும் தீவிர சோதனையில்ஈடுபட்டனர்.இதன் காரணமாக மேற்படி வழக்கின் குற்றவாளி காட்டுப்பகுதியை விட்டு வெளியே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று (06.03.2025) அதிகாலை 4.30 மணியளவில் மேற்படி ஆதாயக்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான மேல நம்பிபுரம் பகுதியைச் சேர்ந்த எட்டுராஜ் மகன் முனீஸ்வரன்(24) என்பவரை எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, சார்பு ஆய்வாளர் திரு. முத்துராஜ், தலைமை காவலர் ஜாய்சன் நவதாஸ் உட்பட தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்

அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை புதைத்து வைத்த இடத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கையின் போது அவர் தப்பிச்செல்லும் எண்ணத்தில் தனிப்படை காவல்துறையினரை அங்கிருந்த அரிவாளால் தாக்கியபோது, மேற்படி காவல்துறையினர் தற்காப்புக்காகவும், எதிரி தப்பி ஓடுவதை தடுக்கும் பொருட்டும் அவரது  காலில் சுட்டுப்பிடித்து, அவரிடமிருந்து மேற்படி ஆதாய கொலை வழக்கில் திருடு போன 5 ¾ சவரன் தங்க நகைகள், பணம் ரூபாய் 20,000/-ஐ மீட்கப்பட்டுள்ளது.

இதற்கடையில் இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் மகேஷ்கண்ணன் (28) என்பவரும் தப்பியோட முயற்சிக்கும் போது காவல்துறையினர் அவரை கைது செய்து அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் மீதமுள்ள 4 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15,000 மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் விரைவான விசாரணை மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கையின் காரணமாக இந்த கொடுரமான குற்றத்தை செய்த குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் குற்றவாளி தாக்கியதில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் உதவியாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜாய்சன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்துடன் காவலர்களின் துணிச்சலான சம்பவத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன் ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் உடன் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory